பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் (BRICS) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்கக் கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ்(BRICS) நாடுகள் 10 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.