மீண்டும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு – மக்கள் சிரமம்.

0
176

மலையக தோட்டங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உணவகங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கேஸ் நிலையங்களுக்குச் சென்று எரிவாயு கொள்வனவு செய்ய முடியாமல் வெறுங்கையுடன் சுற்ற வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் சரியான சமையல் எரிவாயு முறை இல்லாத காரணத்தால் தாம் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here