நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இலங்கையில் உள்ள தனியார் துறைகளின் தலைவர்களுடன் இன்று(10) தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருவாயும் சரிந்துள்ளது, கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் இறக்குமதி மற்றும் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வங்கிகள் அறவிடும் அதிக வட்டி வீதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.