முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது
இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் 28 ரூபாய் முதல் 32 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளது.