சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றை வாங்க முடியாமல் தவிப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
கால்நடைத் தீவனங்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதே இந்த நிலைக்குக் காரணம் என முட்டை மற்றும் கோழி வளர்ப்போர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் கால்நடை தீவன விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இந்த சூழலில் கால்நடை பண்ணைகளை நடத்துவது கடும் சிக்கலாக மாறியுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தாம் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.