சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு பன்மூர் தோட்ட பகுதியில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக எவ்வித வேலையுமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 65 வயதிற்கு மேல் கொண்ட சுமார் 94 குடும்பங்களுக்கு பன்மூர் இளைஞர் ஒன்றியம் இன்று (03) திகதி அத்தோட்டத்தில் உள்ள பாலர் பாடசாலை கட்டடத்தில் வைத்து உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள குறித்த அமைப்பு கடந்த காலங்களில் இணைய வழி கல்வி மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்த மாணவர்களுக்கு, இணைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தது. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்த போது மக்களின் பாதுகாப்பு கருதி முகக்கவசங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் பிரதேசத்தின் குடிநீர் பிரிச்சினைக்கும் குறித்து அமைப்பு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் கருப்பையா குணசிங்கம் தெரிவித்தார்.
பன்மூர் சோசல் யுனிட்டி என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய கைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்ட கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் முதியோர்களுக்கு ஆசி வேண்டி பன்மூர் ஆலத்தில் விசேட பூஜை வழிபாடு ஒன்றும் நடத்தி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வுக்கு தலைவர் கருப்பையா குணசிங்கம், செயலாளர் ரா.ஜனகராஜ், திட்டமிடலாளர் எஸ்நந்தகுமார் கிராம சேவகர், பொது சுகாதார பரிசோதகர் பாடசாலை அதிபர் தோட்ட உதவி முகாமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்