முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணம்!

0
296

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

74 வயதாகும் முகமது அலி அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. (பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும்.) அந்த நோயின் பாதிப்பால் முகமது அலிக்கு தற்போது சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்பட்டது.

பீனிக்ஸில் உள்ள பேரோ நியூராலஜிக்கல் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மருத்துவர் ஆப்ரஹாம் லீபெர்மேன்தான், முகமது அலிக்கு சிகிச்சையளித்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இவர், 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here