மேற்கு வங்கத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் – மூவர் கைது

0
37

இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலாம் துஷ்பிரயோம் செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவி ஒடிசாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தை அடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களையும் இரவு கலாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகளை வெளியே வர அனுமதிக்கக் கூடாது. மாணவிகள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் மாணவிகள் இரவு நேரங்களில் வெளியில் வராதீர்கள் என  முதலமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here