மேலும் குறைவடைந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

0
231

கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளன.

இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பருப்பு 375 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதேநேரம், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here