வரையறுக்கப்பட்ட மத்திய மாகாண கல்வி சேவையாளர்கள் சணச சங்கத்தின் மகா சபை பொது கூட்டம் நேற்று (19) திகதி கண்டி பொல்கொல்ல கூட்டுறவு அபிவிருத்தி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கணக்காய்வு அறிக்கை,2023 ம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டம் மற்றும் மேலாண்மை வரவு செலவு திட்டம். அழைப்பு கடிதம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தனி சிங்கள மொழியில் அனுப்பப்படுவதாகவும். இதனால் தங்களுக்கு தீர்மானம் மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் குறித்த பணிப்பாளர் சபையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் இருந்தும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பதாகவும் பல மகா சபை அங்கத்தவர்களால் குற்றம் சுமத்தப்பட்டன.
இது குறித்து பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் ஓரே ஒரு தமிழ் பிரதிநிதித்வமான க.சுந்தரலிங்கத்திடம் வினவிய போது கடந்த ஆறு வருடத்திற்கு மேலாக பணிப்பாளர் அங்கவத்துவராகவும் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக மகா சபை அங்கத்தவராக அங்கத்துவம் வகிப்பதாகவும்,இதன் போது தமிழ் அங்கத்துவர்களின் பிரிச்சினைகள் மற்றும் உரிமைகள் தொடர்பாக உச்ச அளவில் செயப்பட்டு உள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற மகா சபைக் கூட்டங்களின் போது அழைப்பு கடிதம், மகா அபிவிருத்தி திட்டம் மற்றும் மேலாண்மை பட்ஜட் மதிபீடு அறிக்கை உள்ளிட்ட விடயங்களை தான் எவ்வித கொடுப்பனவும் பெற்றுக்கொள்ளாமல் தமிழ் பிரதிநிதிகளின் நன்மை கருதி தான் பல நாட்கள் நேர காலம் பாராது மொழி பெயர்ப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த மொழிபெயர்ப்பு.
தமிழ் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்படாதன் காரணமாக பல்வேறு நெருக்கடியான நிலைமைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,குறித்த கூட்டத்தின் போது தலைவர் மாத்திரம் விளக்கம் அளிப்பதனால் இது தொடர்பான யதார்த்தமான உண்மையினை வழங்க முடியாத நிலையில் ஒரு தனி நபராக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும்,இந்த மொழி பெயர்ப்பு குறித்த பலர் அறிந்திருந்த போதிலும் அதன் உண்மை தன்மை அறிந்திருந்தும் அது குறித்து கேள்வி எழுப்பாது எதுவும் தெரியாது போல் பல தமிழ் அங்கத்தவர்கள் குற்றம் சுமத்துவதற்காக மாத்திரம் செயப்படுவது கவலையளிப்பதாகவும்.
இது குறித்த பணிப்பாளர் சபையில் எழுத்து கேள்வி எழுப்பி தீர்க்கமான முடிவு கிடைக்காத பட்சத்தில் இதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்,இது குறித்து உண்மையான நிலையினை மத்திய மாகாணத்தில் 15 கல்வி வலயங்களில் அங்கம் வகிக்கும் மகா சபை பிரதிநிதிகள் உணர வேண்டும் என்றும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்;.
இதே நேரம் இருக்கின்ற தமிழ் பிரதி நிதித்துவத்தினை இல்லாதொழிப்பதற்கு செயப்படுவதை விட இதற்கு எவ்வாறான தீர்வினை முன் வைக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையும் கட்டாயமும் ஆகும் என்பதனை புத்தி ஜீவிகள் உணர வேண்டும் என சுட்டிக்காட்டுகின்றனர்;.
இந்த கூட்டத்தில் கண்டி கல்வி வலயத்தில் மகா சபை அங்கத்தவர்கள் தெரிவு செய்யும் குழறுபடிகள் இடம்பெற்றிருப்பதாக மத்திய மாகாண கூட்டுறவு ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட முறைபாட்டுக்கு மகா சபை கூட்டத்தின் போது தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளுமாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா வேண்டாமா?என்ற தீர்மானம் தொடர்பாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டன.
இந்த வாக்கெடுப்பின் போது மீண்டும் வாக்கெப்பு தேவையில்லை என்று 36 வாக்குகளும்,வாக்கெடுக்க வேண்டும் என்று 35 வாக்குகள் அளிக்கப்பட்டதற்கமைய வாக்கெடுப்பு தேவையில்லை என முடிவு செய்யப்பட்டன.
குறித்த கூட்டத்தில் இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம் பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண சணச சங்கத்தின் தலைவர் கப்பில பியந்த அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கூட்டறவு திணைக்களத்தின் அதிகாரிகள்,மகா சபை உறுப்பினர்கள்,மற்றும் பொது முகாமையாளர்,நிர்வாக உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்