மலையக மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து ஆர்.ராஜாராம் தற்காலிகமாக விலக்கபட்டுள்ளதாக மலையக மக்கள் முண்ணனியின் பொதுச்செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவிப்புமலையக மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜராம் தற்காலிகமாக நீக்கபட்டுள்ளதாக மலையக மக்கள் முண்ணனியின் பொதுச்செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார் 08.07.2018.ஞாயிற்றுகிழமை கொட்டகலை அஸ்வினிக்கா விருந்தகங்கள் இடம் பெற்ற கட்சியின் பொதுகூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.லோரன்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் முண்ணனியின் சிரேஸ்ட இரண்டு தலைவர்களை தகாத வர்த்தை பிரயோகத்தை மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் பிரயோகித்தார் என்ற அடிப்படையின் போது அவசரமாக கூட்டப்பட்ட இந்த பொதுகூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேலை மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராமிற்கு கட்சியின் ஊடாக மேற்கொள்ளபடும் விசாரனைகள் நிறைவுபெரும் வரை மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர. ராஜாராம் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வகிக்க முடியாது எனவும் ஏ.லோரன்ஸ் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)