யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய தொகுதிகளை கைப்பற்றிய தாமரை மொட்டு!!

0
188

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று பிற்பகல் 4 மணியளவில் நிறைவடைந்த நிலையில் , பிற்பகல் 4.30 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமானது.

எவ்வாறாயினும் , இரவு 9 மணி தொடக்கம் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்த நிலையில் , நள்ளிரவு 12 மணியின் பின்னரே முதலாவது முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி , ஆரம்பம் முதலே முன்னிலைப்பெற்று வந்த ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போதைய நிலையில் , 68 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

தென்னிலங்ககையின் பெரும்பாலான தொகுதிகளில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக் கட்சி 12 தொகுதிகளிலும் , ஐக்கிய தேசிய கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 3 தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளது.

இதுவரை, சுமார் 100 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அதிகாலை ஊடக அறிக்கை ஒன்று வௌியிட்டது. அனைத்து வட்டாரங்களின் வாக்களிப்பு பெறுபேறுகளும்மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அவற்றில் சில அஞ்சல் வாக்குகளின் பெறுபேறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. <எனினும் சில உள்ளாட்சி சபைகளின் பெறுபேறுகளில் அஞ்சல் வாக்களிப்பின் பெறுபேறுகள் உள்ளடக்கப்படாதுள்ளன.

இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை மீண்டும்மீண்டும் பரிசீலிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தொலைநகல் மற்றும் தொலைபேசிகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை, தரவு கட்டமைப்புகள் உட்புகுத்தும் வரையில், ஊடகங்களுக்கு பெறுபேறுகளை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.

இதனால் பெறுபேறுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்படும் வரையில் பொறுமைக் காக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.<

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here