யாழில் கொள்ளையிட முயன்றவரை மடக்கி வீழ்த்தி புரட்டி எடுத்த வீரப்பெண்!

0
246

யாழ் பண்ணாகத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்த கொள்ளையன் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சங்கிலியை அறுத்த கொள்ளையனை பெண் மடக்கி வீழ்த்தி உதைத்த போது மோட்டார் சைக்கிளையும் விட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடத் தொடங்கியுள்ளான் கொள்ளையன்.

இதனை பார்த்த வீதியால் சென்றவர்கள் கொள்ளையனை துரத்திப் பிடித்து நையப்புடைத்து வட்டுக் கோட்டைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பொதுமக்களால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் அண்மைகாலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெண்னின் வீர செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here