யாழில் பல்கலைக்கழக மாணவனின் அறைக்குள் ஆடையின்றி பிடிபட்ட 19 வயது மாணவி

0
59

யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் ஆடையின்ற நிலையில் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவனின் அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள். இது தொடர்பாக குறித்த வீட்டின் சொந்தக்காரியான வயோதிப மூதாட்டிக்கு அயலவர்கள் புகார் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் மூதாட்டி அது தொடர்பாக அக்கறை செலுத்தாது தொடர்ச்சியாக மாணவன் தங்குவதற்கு அனுமதித்துள்ளார். குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் 78 வயதான மூதாட்டி தனியே வாழ்ந்து வந்ததால் தனது பாதுகாப்புக்காக குறித்த மாணவனை அறையில் தங்க வைத்துள்ளதாக மூதாட்டி அயலவர்களுக்கு கூறி வந்துள்ளார்.

அதன் பின்னரே அயலவர்கள் சிலர் சேர்ந்து குறித்த மாணவனின் அறைக்குள் நுழைந்து மாணவியை ஆடையின்றிய நிலையில் பிடித்ததுடன் குறித்த மாணவனையும் நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தைக்கு கீழ் மாணவி நிர்வாண நிலையில் இருந்ததாக தெரியவருகின்றது.

பெற்றோரை வரவழைக்கப்பட்டு அயல்வீட்டுப் பெண்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மாணவியை அவளது பெற்றோருடன் அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது.உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவுக்கு தனிப்பட்ட வகுப்புகள் கற்று கொடுப்பதாகக் கூறியே குறித்த பல்கலைக்கழக மாணவன் தனித்தனியே பெண்களை தனது அறைக்கு கூட்டிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவியின் பெற்றோரின் தகவலின்படி, மாணவி குறித்த பல்கலைக்கழக மாணவனிடம் பல மாணவிகளுடன் சேர்ந்து வகுப்புக்குச் சென்று வந்தவர் என்பதுடன் பல்கலைக்கழக மாணவன் இன்னொரு மாணவியின் வீட்டில் 15 க்கும் அதிகமான மாணவிகளுடன் சேர்ந்து தனது மகளுக்கும் வகுப்பு எடுத்து வந்தவர் என பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.

அயலவர்கள் தாக்குதல் நடாத்தி விட்ட பின்னர் மாணவியின் தந்தையும் குறித்த பல்கலைக்கழக மாணவன் மீது கடுமையான தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.அத்துடன் பொலிசாருக்கு அறிவிக்க முற்பட்ட போது தனது மகள் உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கு இதனால் பெரும் பிரச்சனை உருவாகும் என கூறி பெற்றோர் மறுத்துவிட்டு தமது மகளை அழைத்துச் சென்றதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவியை விசாரனை செய்த போது வட்சப் ஊடாக பாடங்களில் சந்தேகம் கேட்டு கேட்டு தமக்கிடையே இவ்வாறான தொடர்பு ஏற்பட்டதாகவும் அவரை தான் லவ் பண்ணுகின்றேன் எனவும் மாணவி கூறியுள்ளார்.

குறித்த மாணவனின் புகைப்படங்கள் மற்றும் அம் மாணவனைத் தாக்கும் காட்சிகள் ஊடகங்கள் சிலவற்றுக்கு அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நேற்று மாலை தாக்குதலின் பின் இன்று பிற்பகல் வரை குறித்த மாணவன் அறைக்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாணவனின் லப்டொப், கைத்தொலைபேசி மற்றும் பல உபகரணங்களும் உடமைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here