யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது கணவனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (09-09-2024) யாழ்ப்பாணம் காரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,காரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த ஓகஸ்ட் மாதம் உயிரிழந்திருந்தார்.
உயிரிழ்ந்த குடும்ப பெண்ணின் அந்தியேட்டி கிரியைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றது.