வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்துள்ள நபர் ஒருவர் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை ப்ரான்ஸிற்கு அனுப்புவதாக ஆசைகாட்டி ரூபாய் 13 இலட்சத்தை பெற்றுள்ளார்.
அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்ததுடன் மீதமுள்ள 10 இலட்ச ரூபாய் இன்னமும் திருப்பி கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பணத்தை வழங்கிய நபர் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ள நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




