யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை முன்னெடுத்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.