யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் .அவர்களிடமிருந்து 90 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான குரு நகரைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை (03) அன்று கைது செய்யப்பட்டனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது.
கைதான இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.