யாழ் பிரபல பாடசாலையொன்றில் சிறுமிக்கு நேர்ந்த கதி

0
91

யாழ் மானிப்பாய் பிரபல பாடசாலையில் தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் பிரத்தியோக வகுப்பு நடாத்திவரும் குறித்த ஆசிரியர் மாணவியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.பாதிக்கபப்ட்ட மாணவி சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்தே குறித்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரப்பட்டுள்ளார்.கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலர் மாணவிகளிடம் இவ்வாறு ஒழுக்க கேடாக நடத்துகொள்வது ஒட்டுமொத்த ஆசிரியர்களியும் இழிவு படுத்தும் செயலாகும்.

அதோடு மாணவ்ர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் ஆசியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here