யுவதியை தேடும் பணி தீவிரம்.

0
236
279 அடி ஆழமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள யுவதியை தேடி விசேட தேடுதல் பணி முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) மாலை நண்பிகளுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது குறித்த 19 வயது யவதி நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயிருந்தார்.
லிந்துலை பகுதியில் வசித்த 19 வயதான யுவதியே நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here