கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
பிலியந்தலை – பெலன்வத்தை, சமகி மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயது யுவதி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் ஒருவர் அப்பிரதேசத்தின் தகவல் தொலைத் தொடர்பு கோபுரத்தின் மேல் நின்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இடத்திற்கு வந்த பிலியந்தலை பொலிஸார் மூன்று மணி நேர கடின உழைப்பின் பின்னர் சந்தேக நபரை தகவல் தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே இறக்கி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் யுவதியை தாக்கியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்கு உள்ளான யுவதியின் தலை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், அவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.