ரஜினியுடன் ஷாருக்கான்… ‘ஜெயிலர் 2’ படத்தில்!

0
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’திரைப்படம் 2023-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

முதல் பாகத்தைப் போலவே ‘ஜெயிலர் 2’ படத்திலும் பல முன்னணி நடிகர்கள் கேமியோ தோற்றத்தில் நடிக்கின்றனர். அதன்படி மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகைகள் ராம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பாலிவுட்டின் “பாட்ஷா” என அழைக்கப்படும் ஷாருக்கான் கேமியோ ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here