முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன தூதுவர் Qi Zhenhong சீ செங் ஹொங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்றது.
சீன தூதுவர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிலைமையக் தொடர்பில் சீனத் துதுவரும் முன்னாள் ஜனாதிபதியும் இதன்போது கலந்துரையாடினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் முன்னதாக சீன தூதுவர் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.
முன்னாள் அரசியல் பிரதானிகள் பலரையும் அவர் சந்தித்து கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது.