இந்நாட்டின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான ரணில்விக்ரமசிங்க அவர்கள் மத்திய வங்கியில் வைப்பில் இடப்பட்ட நிதிகளைமோசடி செய்துள்ளமை தொடர்பில் அவருக்கு தொடர்பு உள்ளது என்பதை இந் நாட்டின் ஜனாதிபதி 28.10.2018.ஞாயிற்றுகிழமை ஆற்றிய விஷேட உரையின் போது நாட்டின் மக்களுக்கு அறிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் மத்திய வங்கியின் நிதிமோசடி தொடர்பிலும் அர்ஜீன் மகேந்திரன் தொடர்பிலும் நாட்டில் பரவலாக பேசபட்டு வந்தது இந்த சந்தர்ப்பதில் மத்திய வங்கியின்
நிதி மோசடி தொடர்பில் முன்னால் பிரதம மந்திரி கைது செய்யபட்டு சட்டத்தின்
முன் நிறத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
29.10.2018.திங்கள் கிழமை மஸ்கெலியா பிரதேசசபையினால் ஏற்பாடு செய்திருந்த விஷேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கறுத்து தெரிவிக்கையில்
இந்த நாட்டினுடைய புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கின்ற மஹிந்தராஜபக்ஸ
அவர்களிடம் ஸ்ரீலாங்க சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் என்றவகையில் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
பொதுமக்களின் நிதிகளை மோசடி செய்த ரணில்விக்ரமசிங்க அவர்களை கைது செய்வது மாத்திரம் அல்லாமல் நிதிமோசடி செய்தவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு அந்த பொது மக்களின் நிதிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்று கொடுப்பதற்க்கு
தாங்கள் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்
மத்திய வங்கியின் நிதிமோடி தொடர்பில் சம்பந்தபட்டவர்களை கைது செய்யவேண்டும் அவர்கள் தொடர்பான சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பாரிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டாலும் கூட அவற்றை எல்லாம் தடுத்து ஆர்ஜீன் மகேந்திரனை வேறு ஒரு நாட்டில் மறைத்து வைத்து இந்த மத்திய வங்கியின் செயற்பாடுகளை மறைப்பதற்க்கு முன்னால் பிரதமர்
ரணில்விக்ரசிங்க முன்னெடுத்து இருந்தார் என்பது தொடர்பான உண்மையான தகவல்
தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் NTI என்ற ஒரு தனியார் நிறுவனம் வைப்பில் ஈட்டு அந்த நிதிகளை மோசடி செய்தமைக்கு இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை அந்த வகையில் இந்த NTI நிறுவனத்தின் நிதி தொடர்பிலும் முன்னால் பிரதமர் ரணில்விக்ரசிங்க
அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.
அது மட்டும் அல்ல இந் நாட்டின் அதி உயர் பாதுகாப்பில் இருக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்களையும் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களையும் கொலை செய்வதற்க்கு சதி தீட்டிய ஒரு மனிதர் முன்னால் பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்கள் எனவே இந்த பாரிய மூன்று குற்றங்களையும் புரிந்த முன்னால் பிரதமர் தொடர்பிலான சகல தகவல்களையும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கபட்டதும் அல்லாமல் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெழிவுபடுத்தி
இருக்கிறார் இவ்வாறான சந்தர்பத்தில் நாட்டின் ஜனாதிபதி அவர்களிடம் ஒரு
கேள்வியை ஏழுப்புகின்றோம் முன்னால் பிரதமர் ரணிலல் விக்ரசிங்க அவர்களை கைது
செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரிக்கைவிடுத்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)