ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் தற்போது IMFன் கடனுதவி கிடைத்திருக்கும் – அநுரவை சாடிய மனுஷ

0
76

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடனுதவி தற்போது கிடைத்திருக்கும் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தவணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் கொண்டு வரப்படும் இந்த அரசியலமைப்பு இன, மத நிலையை மாற்ற முயற்சிக்குமா என்பது சந்தேகமே.

ஐ.எம்.எப் கடன் தவணை அடுத்த வாரம் நிறைவேற்றப்படாது. ஆனால் அதன் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வர உள்ளனர்.

மேலும், அரசாங்கம் நாடு மீண்டும் திவாலாகும் வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் தேர்தல் வெற்றிக்கான முடிவுகளையே எடுத்துள்ளனர் என்றும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here