ரயில் சேவையில் இடையூறு

0
94

தெமட்டகொட புகையிரத நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை விட்டுச் சென்றமையினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதங்களின் தாமதங்கள் மற்றும் இரத்துச் செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெமட்டகொட புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியுள்ளனர்.

இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே புகையிரதம் மற்றும் பதுளை ஒடிசி ஆகிய ரயில்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

இந்நிலைமை காரணமாக பல புகையிரத பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here