வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருநாணாயக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியை இல்லாதொழிக்க பலர் முயற்சித்து வருவதாக தெரிவித்த ரவி கருணாநாயக்க, கட்சியின் தனித்துவத்தைக் காப்பதற்காகவும் நல்லாட்சியில் முன்னுதாரணமாக செயற்படும் வகையிலும் பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினராக பின்வரிசையில் அமர்ந்தார்.