ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது!

0
150

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான ‘அஸூர் எயார்’ (Azur Air) இன் விமானம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

335 பயணிகளுடன் குறித்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளை முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள இந்த விமானங்கள் வாரந்தோறும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here