இராகலை சென்லெனாட்ஸ் கணிக்கா தோட்டத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் முள்ளன் பன்றி வேட்டையாடச் சென்று கற்குகை ஒன்றில் சிக்குன்று பலியான இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரேத பரிசோதணைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
(17 .09.2018) திங்கட்கிழமை காலை பிரேத பரிசோதணையை சட்டவைத்தியர் ஆர். எம். சமண் மேற்கொண்டதன் பின் 01 மணியலவில் உறவினர்களிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
இராகலை சென்லெனாட்ஸ் மத்திய பிரிவை சேர்ந்த செல்லையா அசோக்குமார்(29) மற்றும் சென்லெனாட்ஸ் மொணிக்கா பிரிவை சேர்ந்த மகேஸ்வரன் இரத்தினேஸ்வரன் (31) இருவரினது சடலங்கள் இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முள்ளன் பன்றி வேட்டைக்காக இவர்கள் இருவரும் காவலுக்கு நாய் ஒன்றை அழைத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை கணிக்கா தோட்டத்திற்கு அருகில் உள்ள வனபகுதிக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அங்கு முள்ளம் பன்றி பதுங்கியுள்ள கற்குகை ஒன்றுக்கு புகைமூட்டிவிட்டு பின் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
பின் சனிக்கிழமை (15) காலை தமது வீட்டை விட்டு வனப்பகுதிக்கு வேட்டை நாய் ஒன்றுடன் மீண்டும் சென்றுள்ள இவர்கள் தீ புகை இட்டுவந்த சிறிய கற்குகை ஒன்றுக்குள் வேட்டைக்கு அழைத்து சென்ற நாயுடன் குகைக்குள் புகுந்துள்ளனர்.
இதனையடுத்து புகையினால் மூச்சு எடுக்க முடியாமல் குகைக்குள் உயிரிழந்துள்ளனர்.
என இராகலை பொலிஸ் நிலையில் பொறுப்பதிகாரி அயோத் தம்மிக காரியவசம் தெரிவித்துள்ளார் .
அத்துடன் குகைக்கு புகையூட்டும் போது மாணப்புல், மற்றும் கருப்பன் தேயிலை இலைகளை பாவித்துள்னர்.
இதனால் கூடுதலான புகை குகைக்குள் இருந்துள்ளது.இதில் மூச்சி தினறல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக சட்டவைத்திய அதிகாரி ஆர்.எம்.சமண் தனது பிரேத பரிசோதணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்ததுள்ளது இரு நபர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மைத்துனர்கள் ஆவர்.
இவர்களில் எம்.இரத்திணேஸ்வரனுக்கு 6வயது மற்றும் 3 வயதில் இரண்டு பெண்கள் பிள்ளைகள் உள்ளனர்.
அதேபோல் எஸ்.அசோக்குமாருக்கு 6 வயது மற்றும் 3 வயதில் ஆண் மற்றும் பெண்கள் பிள்ளைகள் உள்ளனர்.
உயிரிழந்த இரு நபர்களும் மரக்கறி தோட்டங்களில் கூலி வேலை செய்வதுடன் அவ்வப்போது வேட்டைக்கும் செல்பவர்கள் என்பது இறந்தவர்களின் மணைவிகள் வழங்கியது மரண விசாரணை வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி சந்ரு .