சுகாதாத அமைச்சை மீண்டும் முன்னால் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவிற்கு வழங்க கூடாதென நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் எதிர்ப்பு ஆபாட்டத்தில் ஈடுபட்டனர்
மதிய போசன விடுமுறை நேரத்திலே 02.11.2018 மதியம் 1 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட சங்கத்தின் செயலாளர் நியால் திசாநாயக்க தெரிவித்ததாவது….
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் புதிய சுகாதார அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மீண்டும் ராஜித்த சேனாரத்தன புதிய அரசில் இணைந்து சுகாதார அமைச்சை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ராஜித்த சேனாரத்தனவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டாம் எனவும் புதிய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
நோட்டன் பிரிஜ் நிருபர்