றம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையின் போது காயமடைந்த மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதாக கேகாலை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி எமது கெப்பிடல் செய்தி பிரிவிற்கு இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காயமடைந்த ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் பொலிசார் மற்றும் ஆர்பாட்டக்காரர்கள் இடையே அடம்பெற்ற அமைதியின்மையில் ஒருவர் உயிரிழந்ததோடு, 20 பொலிசார் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்தனர்.