நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 5 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பின்படி, 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 1,071 ரூபாவாகவும், 2.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 506 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.