ஒன்றரை வருடங்களாக முடக்கத்தில் இருந்த பாடசாலை கல்வி நேற்று (21) வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் தமது பாடசாலைக்கு ஆசிரியர்கள் வராமைக்கு எதிராகவும் எமது ஆசிரியர்களின் சம்பள போராட்டத்திற்கு அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்க வேண்டும் என்றே எமது பெற்றோர்களை இணைத்துக்கொண்டு மாணவர்களாகிய நாம் போராடினோம்.
தவிர எமது உண்மையான போராட்டம் ஆசியர் சமூகத்திற்கு எதிரானதல்ல என்பதை அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். என லிந்துலை இராணிவத்த தோட்ட மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பேரிடருக்கு மத்தியில் பாடசாலை கல்வி் தடைப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்பு 200க்கு மேற்படாத மாணவரகளை கொண்ட பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நேற்று (21) ஆரம்பமானது.
இதன்போது கல்வி கற்கும் ஆர்வத்துடன் எமது பாடசாலைக்கு சென்ற எமக்கு அங்கு கல்வி பயில பொறுப்பு மிக்க அதிபர்,ஆசிரியர்கள் வருகை தந்திருக்கவில்லை.
இதனையடுத்து எமது பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம்.
இந்த நிலையில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தராததை எதிர்த்து போராடிய மாணவர்களாகிய நாம் ஆசிரியர்கள் அவர்களது சம்பள முறன்பாட்டை தீர்க்க கோரி போராடுவதை இதன்போது உணர்ந்தோம்.
ஆகையால் எமக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் சம்பள போராட்டத்திற்கு நாமும் வலுசேர்க்கும் வகையில் மாணவர்களுடைய கோரிக்கையை பாதைகளில் வெளிக்கொனர்ந்து அவர்களுக்கு ஆதரவாகவும் போராடினோம்.
நாம் முன்னெடுத்த இந்த போராட்டத்திற்கு எங்களது பெற்றோர்களும் வலுசேர்த்த நிலையில் இப்போராட்டத்தை நாம் ஆசிரியர்களுக்கு எதிராக முன்னெடுத்ததாக சிலர் உண்மைக்கு புறம்பாக செய்தியிடப்பட்டுள்ளதை அறிந்தோம்.
அதேநேரத்தில் இவ்வாறான செய்தியால் எதிர்காலத்தில் மாணவர்களாகிய நாம் பாதிக்கப்படக்கூடாது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கும் கொண்டு வரும் அதேவேளை நாம் முன்னெடுத்த போராட்டத்தின் உண்மை தன்மையை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக மாணவர்களும்,பெற்றோர்களும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தனர்.
பா.பாலேந்திரன்