லிந்துலை நாகசேனை நகரத்தில் பொது மலசல கூடத்தை காணவில்லை…..

0
218

லிந்துலை நாகசேனை நகரத்தில் பொது மலசல கூடத்தை காணவில்லை.

நாகசேனை நகருக்கு அன்றாடம் பொது மக்கள்,மாணவர்கள், பல பேர் வந்து செல்லும் பிரதான நகரமாக காணப்படுகின்ற போதிலும் இங்கு பொது மக்கள் அவசர தேவைக்காக பயன்படுத்த ஒரு பொதுவான மலசல கூடம் இல்லை.
லிந்துலை நாகசேனை நகரில் கொட்டகலை பிரதேச சபையினால்  அமைக்கப்பட்டிருந்த  பொது மலசல கூடத்தை உடைத்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  புதிதாக  உருவாக்கப்பட்ட அக்கரபத்தனை  பிரதேச சபையின் கவணத்துக்கு செல்லபட்டபோதும் இதுகுறித்து இதுவரை கவணம் செலுத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்பிரச்சினை தொடர்பாக உரிய பிரதேச சபை அதிகாரிகள் கவணத்தில் கொண்டு  நாகசேனை பொது மலசலகூடத்தை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கின்றார்கள்.
செய்தியாளர் பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here