லிந்துலை நாகசேனை குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினரும் இ.தொ.கா உபத்தலைவருமான பழனி சக்திவேல் தலைமையில் இடம்பெற்றது.
தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆலோசணையில் லிந்துல நாகசேனை தோட்ட குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் முன்னாள் மத்தியமாகாணசபை உறுப்பினரும் இ.தொ.கா உபத்தலைவருமான பழனி சக்திவேல், அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ்.சச்சிதானந்தன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்