ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காம்பியா மற்றும் செனகல் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட அகதிகள், ஒரு சிறிய ரப்பர் படகில் லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர்.




