லுணுகலை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று (08)மதியம் பிரபல லொத்தர் டிக்கட்டுடன் தொடர்புடைய இரண்டு வெற்றி இலக்கங்களை வெட்டி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தினம் தோறும் லொத்தர் சபையினால் சீட்டிழுக்கப்படும்
கடைசி இரண்டு எண்களை ஊகித்து மக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய
சோதனைக்கு உட்படுத்தி குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் லுணுகலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி சந்திரசேகர உள்ளிட்ட குழுவினர் குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.