ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் காசல்ரி லெதன்டி தோட்டத்தின் குடியிருப்புக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள குடி நீர் போசன பிரதேசமான பாதுகாப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் குறித்த காட்டுப்பகுதியில் சுமார் 05 எக்கருக்கு மேல் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த பிரதேசத்தில் வரட்சியுடன் கடும் காற்றும் வீசுவதனால் தீ மிக வேகமாக பறவி சென்றன. இதனால் குறித்த காட்டுப்பகுதியில் காணப்படும் நீரூற்றுக்கள் அரிய வகை தாவரங்கள் சிறிய உயிரினங்கள் ஆகியன தீயினால் அழிந்து போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றன.
லெதன்டி பகுதியில் காணப்படுகின்ற தோட்ட குடியிருப்புக்களுக்கு குறித்த காட்டுப்பகுதியிலிருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதனால் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அவதானமும் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் காசல்ரி நீர்தேகத்திற்கு நீர் போசன பிரதேசமான குறித்த பிரதேசம் காணப்படுவதனால் காசல்ரி நீர்தேகத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம். குறித்த தீயினை இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்த்ரலிங்கம்