வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் லொறியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தீபாவளிக்கு விற்பனை செய்ய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரியவருகின்றது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறியை வீதியோரத்தில் நிறுத்தச் சென்றபோது வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் லொறியில் பயணித்த சாரதி படுகாயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் லொறியில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.