வடகிழக்கு பருவமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0
19
(241128) -- COLOMBO, Nov. 28, 2024 (Xinhua) -- Cars run on a waterlogged road in Colombo, Sri Lanka, Nov. 26, 2024. Four people were killed, nine were injured, and six were missing due to floods in Sri Lanka, said the Disaster Management Center (DMC) on Wednesday. The floods have affected 230,743 people and destroyed more than 600 houses, Director General of the DMC Udaya Herath told a press conference. (Photo by Gayan Sameera/Xinhua)

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால்,  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில், நாட்டின் சில பகுதிகளில் 250 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள அனைத்துத் திணைக்களங்களும், பொதுமக்களும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சி முன்னறிவிக்கப்பட்டபடி நீடித்தால், அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றத்திற்கும் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here