வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்த வடைகடை ஒன்றி தீ பரவல் சம்பவம் ஒன்று 13.05.2018. ஞாயிற்றுகிழமை 03.45 மணி அளவில் இடம் பெற்றதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர் .வடைகடையில் இருந்த கேஸ்சிலின்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே முழு வடைகடையும் தீயில் கருகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த தீ பரவலினால் சில மணி நேரம் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)