இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிது ஹசரங்க உள்ளிட்ட ஏனைய வீரர்கள் 06 இலட்சம் இந்திய ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 25% அபராதமாக செலுத்த வேண்டும்.
இது இலங்கை நாணயத்தில் சுமார் இருபத்து நான்கு இலட்சம் ரூபாயாகும்.
இதேவேளை, அணித்தலைவர் விராட் கோலிக்கு இந்திய ரூபாய் 24 இலட்சம் அதாவது இலங்கை ரூபாய் 94 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.