ஊடகவியலாளரும் சமூகப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய மலையக தியாகிகளின் வரலாற்று நூலான ‘வெந்து தணியாத பூமி’யின் வெளியீட்டு விழா மலையகக் கலை பண்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று அட்டனில் இடம்பெற்றது.
நூல் வெளியீட்டு விழாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் சார்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் எழுத்தாளருமான
சோ. ஸ்ரீதரன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மலையக கலை பண்பாட்டு மன்றத்தின் செயலாளர் இரா. ஜீவன் ராஜேந்திரனின் தொடக்கவுரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் நூல் அறிமுக உரையை ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகரும் மலையக கலை பண்பாட்டு மன்றத்தின் தலைவர் கு.இராஜ்சேகரும் நூலாய்வுரையை பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி வி.டி. செல்வராஜும் கருத்துரையை சட்டத்தரணி செல்வராஜும் வழங்கினர்.
மலையக கல்வியியலாளரும் ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளருமான நாகலிங்கம் மற்றும் மூத்த தொழிற்சங்க வாதியும் எழுத்தாளருமான தவசி ஐய்யாதுரை ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வை உதவி சமுர்த்தி முகாமையாளர் புவனேஸ்வரன் தொகுத்து வழங்கினார்