இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியான காலநிலையால் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 2.5 வீதமாக குறைந்துள்ளதுடன், சமனலவாவியில் இருந்து நீரை விநியோகிக்கும் உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 2.8 வீதமாக உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி விதானப்பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, நிலவும் வறட்சியால் மனிதர்கள் மட்டும் இன்றி அனைத்து வனவிலங்குகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.