வறண்ட காலநிலை – நீர் விநியோகம் தடை

0
266

வறட்சியான காலநிலை காரணமாக 18 பிராந்திய மையங்களின் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக நிலையங்கள் உள்ளதாகவும் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்தார்.

அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு அமைப்பு மூலம் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாக சமந்தகுமார குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, அம்பாறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here