அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் டீஸர் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக ஐரோப்பாவுக்குப் பயணிக்கவுள்ளது படக்குழு.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸரை எப்போது வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.
ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடலையும், 15-ம் தேதி டீஸரையும் வெளியிடலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளது.