வவுனியா ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கு கொரோனோ தொற்று!

0
258

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்போது, அவரை சுயதனிமைப்படுத்துவதற்கும், அவருடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கும் சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தரம் 5 வரை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும் குறித்த ஆசிரியரும் பாடசாலைக்கு சென்று தரம் 1 மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here