தங்களது பிள்ளைகளை கவனிப்பதற்காக சீனா வாடகை அப்பா சேவையை இலவசமாக அறிமுகம் செய்துள்ளது. வடகிழக்கு சீனாவிலுள்ள ஒரு குளியல் இல்லம் ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்கின்றனர்.
அதாவது குழந்தையின் தாய் குளிக்கும் வரை இந்த வாடகை அப்பாக்கள் அந்த குழந்தைகளுக்கு உடை மாற்றி விடுவது முதல் அவர்களை கவனித்துக்கொள்கின்றனர்.
குறிப்பாக இந்தசேவை இலசவமாக வழங்கப்படுவதால் பலர் இச்சேவைக்கு பெரும் வரவேற்பளித்து வருகின்றனர்.
பெண்களுக்கு மட்டுமுள்ள பகுதிகளில் சிறுவர்கள் நுழைவதை தடுக்கவே இச்சேவையை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.