கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 12 – மேடிஸ் லேன் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொலை இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய வாழைத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.