முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் விசேட அறிக்கை வெளியிடவுள்ளார்.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.
தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஜனாதிபதி ஆகஸ்ட் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எனினும் அவரது உடல்நிலை காரணமாக, அவர் ஆரம்பத்தில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று (29) அங்கிருந்து வெளியேறியுள்ளார்.